தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் கட்சி (எஐஎம்ஐஎம்) உள்பட பல கட் கட்சிகள் போட்டியிட்டன. ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தேர்தல் வாக்கு பதிவு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
தற்போதை நிலையில், 80 க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலையில் உள்ளது ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டீரிய சமிதி 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது .