ஐதராபாத்: தெலுங்கானாவில் இன்று மேலும் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் சில நாட்களாக உச்சத்தில் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
இந் நிலையில் தெலுங்கானாவில் இன்று புதிதாக 1,986 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,703 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 816 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 45,388 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 16,796 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 24 மணி நேரத்தில் 21,380 பேருக்கு கொரோனா செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 37 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel