பாட்னா

கால்நடை தீவன ஊழலில் மற்றொரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

 

பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்,  கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து தண்டனை வழங்கியது. அவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ளார்.   இது தவிர லாலு பிரசாத் யாதவ் மீது 5-வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தது.

அந்த தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.   இந்த வழக்கில் மொத்தம் 75 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  நீதிமன்றம் ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத்  யாதவ உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்  தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம்,

“அனைவரும் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்றாலும் இதுவே கடைசி தீர்ப்பாகாது.  இதைப் போல் முன்பு 6 முறை தண்டனை அறிவிக்கப்பட்டதால், அனைத்து வழக்குகளுக்கும் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.  உயர்நீதி மன்றத்துக்கு மேல் உச்சநீதிமன்றம் உள்ளது.  நாம் அதை அணுகுவோம்”

எனக் கூறி உள்ளார்.