பாட்னா:
மக்களவை தேர்தலுக்குப் பிறகு, மாயமான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தான் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியிருக்கிறார்.
மக்களவை தேர்தலுக்குப் பிறகு, தேஜஸ்வி யாதவ் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
பீகார் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் போது, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை.
இதனையடுத்து, முஜாபர்பூரில் 132 குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் இறந்த நேரத்திலும் தேஜஸ்வி யாதவ் மவுனமாக இருந்தார்.
தேஜஸ்வி யாதவர் அமைதியாக இருந்ததால், எதிர்கட்சிகள் பல கதைகளை அவிழ்த்துவிட்டன.
இந்நிலையில்,தேஜஸ்வி யாதவ் தனது ட்விட் பதிவில், தசைப் பிடிப்பு மற்றும் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததால், தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தைகள் இறந்த பிரச்சினையை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இது குறித்து தொடர்ந்து நிலவரத்தை கேட்டு வருவதாகவும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேஜஸ்வி யாதவின் தாயாரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேஜஸுக்கு வேறு பணி இருக்கிறது. விரைவில் அவர் அரசியலுக்கு திரும்புவார் என்றார்.
கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேஜஸ் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.