மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அக்கவுண்டண்ட்டுகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப வல்லுநர்களின் வேலையை ரோபாட்டுகளால் செய்ய முடியுமா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுவதுண்டு. இதற்கு “ஆம், இல்லை” என்ற இரு பதில்களையும் கொடுக்க முடியும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அக்கவுண்டண்ட்டுகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப வல்லுநர்கள் அன்றாடம் திரும்ப திரும்ப செய்யும் சில சாதாரண வேலைகளை (repititive works) ரோபாட்டுகளால் செய்ய இயலும் ஆனால் முடிவெடுப்பது, திட்டமிடுவது மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை இப்போது நடைமுறையில் உள்ள ரோபாட்டுகளால் செய்ய இயலாது. அவை மனிதனால் மட்டுமே முடிந்த வேலைகள்.

robots

ஆனால் ஒரு பக்கம் தொழில்நுட்பம் என்பது மனித உழைப்புக்கு மாற்றாக உருவெடுத்து வருவதும் அதனால் பலர் வேலையிழந்து வருவதும் நாம் கண்கூடாக பார்த்து வரும் விஷயங்கள்தான். இன்று மக்களுக்கு எல்லா தேவைகளும் விரல் நுனியில் கிடைக்கிறது. அவர்களுக்கு ஆரோக்கியம், சட்டம் போன்ற விஷயங்களில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க இப்போது மருத்துவர்களையோ அல்லது வழக்கறிஞர்களையோ அணுக வேண்டியதில்லை. அந்த ஐயங்களைப் இலவசமாக போக்க ஆயிரம் இணையதளங்கள் வந்துவிட்டன. இவ்வளவு ஏன் வெறும் 50,000 பவுண்டுகளுக்கு உங்களுக்கு வீடுகட்டித்தர விக்கிஹவுஸ் தயாராக இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் நீங்கள் பாவமன்னிப்பு பெற பாதிரியாரை தேடி அலைய வேண்டியதில்லை. பாவ மன்னிப்பு தரும் ஆப் ஒன்றை வாட்டிகனின் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அறிமுகப்படுத்திவிட்டது,
சமீபத்தில் ஈபே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களால் தொடுக்கப்பட்ட 60 மில்லியன் புகார்களை ஆன்லைனிலேயே தீர்த்து வைத்திருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு  மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் வருமான வரி கணக்குகளை ஆன்லைனில் பதிவு செய்திருக்கிறார்கள். இதை செய்வதற்கு அவர்களுக்கு இப்போது ஒரு வருமான வரி அதிகாரிகளிடம் போக வேண்டிய தேவையில்லை.
எவ்வளவுதான் இருந்தாலும் தொழில்நுட்பத்தால் சாதிக்க முடியாத மனிதன் மட்டுமே செய்ய முடிந்த சில வேலைகள் இருக்கத்தான் செய்கின்றன. முடிவெடுத்தல், இரக்கம் காட்டுதல், படைத்தல் ஆகியவை மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளாகும்.