சென்னை: பழுதான ரயிலை ஒரு லைனில் இருந்து அடுத்த லைனுக்கு பொதுமக்கள் கைகளால் தள்ளிச்சென்ற அவலம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நாம் பொதுவாக பழுதி நிற்கும் இரு சக்கரவாகனம் 4 சக்கர வாகனங்களை தள்ளி விடுவதும், அவசர தேவைக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தள்ளிச்செல்வதையும் பார்த்திருக்கிறோம். பொதுவாக அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிற்பதும், அதை பயணிகள் தள்ளிவிடும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்தேறும். ஆனால், மத்தியபிரதேசத்தில் பழுதி நின்ற ரயிலை, இழுத்துச்செல்ல மாற்று எஞ்சின் இல்லாத நிலையில், பொதுமக்கள் கைகளாலேயே தள்ளிச்சென்றுள்ளனர்.
ம.பி. மாநலித் ஹர்த் என்ற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அந்த இடத்தை விட்டு நகர மறுத்துள்ளது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் அங்குள்ள பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு கைகளால் தள்ளி சென்றனனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.