
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது.
சத்தீஷ்வர் புஜாரா 160 ரன்களில் 43 ரன்கள் எடுத்து நாதன் லயன் பந்துவீச்சில் அவுட்டாக, தற்போது கேப்டன் கோலியும், துணைக் கேப்டன் ரஹானேவும் களத்தில் உள்ளனர்.
விராத் கோலி 112 பந்துகளில் 39 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ரஹானே 20 பந்துகளில் 2 ரன்களை அடித்துள்ளார். தற்போதைய நிலையில், 55 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 107 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவிலேயே சில விக்கெட்டுகளை இழந்த காரணத்தால், அடுத்தடுத்து மேலும் சில விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நிலையில், இந்திய அணி, மிகவும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
[youtube-feed feed=1]