அமராவதி:
முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து, தெலுங்குதேசம் கட்சி போராட்டம் நடத்தும் என்று அந்த கட்சியின் தலைவர் அச்சன் நாயுடு ( Achhan naidu) தெரிவித்து உள்ளார்.
நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சரான அவரது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாபஸ் பெற்றுள்ளார்.
சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோஷேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெறுவதாகவும், நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் மருமகள் பிராமணிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் பாதுகாப்பை அரசாங்கம் முற்றிலுமாக வாபஸ் பெற்றது.
அத்துடன் நாயுடுவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நாரா லோகேஷின் பாதுகாப்பும் 5 அதிகாரிகளில் இருந்து 2 + 2 காவலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது தெலுங்குதேசம் கட்சியினிரைடையே அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டியின் நடவடிக்கையை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி போராட்டம் நடத்தும் என்று அறிவித்து உள்ளது.