டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெறும் விவகாரத்தில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான அதிகாரங்கள் மற்றும் வரம்புகளைக் குறிப்பிடவில்லை. அதனால், இந்த ஆலோசனைகளை செயல்படுத்த மத்திய மாநிலஅரசுகள் முன்வருமான என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தேர்தல் இலவசங்கள் தொடர்பாக ஆய்வு செய்து ஆணையிடும் வகையில் தற்போது வரை எந்தவொரு குழுவும் இல்லாத நிலையில், அதற்கான குழு அமைப்பது குறித்து உச்சநீதி மன்றம் ஆலோசனை தெரிவித்து உள்ளது. இந்த வரி செலுத்துவோர் அமைப்பு ஒன்றை அமைக்கப்பட்டால், எந்தவொரு அரசியல் கட்சிகளும், இந்த குழுவின் அனுமதியின்றி, தேர்தல் இலவசத்தை அறிவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது.
உலகிலேயே வரி செலுத்துவோரின் மிகப்பெரிய அமைப்பாக இந்தியா தயாராக உள்ளது. அதுவும் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில், வரி செலுத்துவோர் சங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ‘பல செய்திகள் பரவி வருகின்றன. பலர், “எந்த அரசு ஆட்சி செய்தாலும், இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல், இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச விநியோகம் அல்லது கடன் தள்ளுபடியை எந்த அரசாலும் அறிவிக்க முடியாது. பணம் எங்கள் வரி செலுத்துதலுக்கு சொந்தமானது என்பதால், அதன் பயன்பாட்டை மேற்பார்வையிட வரி செலுத்துவோர் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
முன்னதாக, தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியளிக்கும் நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதி மன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்டு 3ந்தேதி நடைபெற்றபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக, அனைத்து ங்குதாரர்களின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு நிபுணர் அமைப்பை அமைப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். பயனாளிகள், இலவசங்களை எதிர்ப்பவர்கள், மத்திய அரசு, மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள், நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக் போன்றவை கொண்ட குழு அமைத்து, இந்த விஷயத்தைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான பார்வையை எடுத்து தங்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள விசாரணை குறிப்பில், “அரசியல் கட்சிகளால் இலவசங்களை விநியோகிப்பது தொடர்பான இந்த மனுக்களில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை மனதில் வைத்து, அனைத்து பங்குதாரர்களின் பிரதிநிதிகள்: பயனாளிகள், இலவசங்களை எதிர்ப்பவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். இதில், மத்திய அரசு, மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள், நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக் போன்றவை சிலவற்றை சேர்க்கலாம், இவைகள், இலவசம் தொடர்பான விஷயத்தைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான பார்வையை எடுத்து, அவற்றின் பரிந்துரைகளை வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே இதுகுறித்து கூறும்போது, தேர்தல் இலவசங்கள் தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் குழுவை உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தாலும், அத்தகைய குழுவின் ஒப்புதல் இல்லாமல் தேர்தல் இலவசங்களை அமல்படுத்த முடியாது என்று இதுவரை குறிப்பிடப்பட வில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறும்போது, “இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் குழுவின் முன் உள்ள கேள்வி என்னவென்றால், இந்த இலவசங்கள் தேர்தலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்த கேள்விக்கு கமிட்டி எப்படி பதில் சொல்லப் போகிறது?” என தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் இலவசங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால், இலவசங்களை கொடுத்து வாக்கு வாங்கும் அரசியல் கட்சிகளின் நிலை கேள்விக்குறியாகி விடும் என பெரும்பாலான மூத்த சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. அதில், உலகின் மிகப்பெரிய அமைப்பாக இருக்கும் அகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பை உருவாக்குவதற்கு ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இனிமேல் எந்த அரசு ஆட்சி செய்தாலும், இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச விநியோகம் அல்லது கடன் தள்ளுபடி எதையும் எந்த அரசாங்கமும்*அறிவிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பணம் நமது வரி செலுத்துவோருக்கு சொந்தமானது என்பதால், அதன் பயன்பாட்டைக் கண்காணிக்கும் உரிமையை வரி செலுத்துவோர் பெற்றிருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வாக்குகளுக்காக இலவசங்களை வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன. எந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அரசு முதலில் அவற்றின் வரைபடங்களைச் சமர்ப்பித்து, இந்த அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். இது எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் அவர்கள் பெற்ற விருப்பமற்ற சலுகைகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜனநாயகம் என்பது வாக்களிப்பதில் மட்டும்தானா? அதன் பிறகு வரி செலுத்துபவர்களாகிய நமக்கு என்ன உரிமைகள் உள்ளன? வரி செலுத்துவோருக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பொறுப்புக் கூறவும், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உரிமை இருக்க வேண்டும். அவர்களின் அனைத்து “வேலைக்காரர்களுக்கும்” வரி செலுத்துவோர் மூலம்தான் சம்பளம் செலுத்தப்படுகிறது. அத்தகைய “இலவசங்களை” திரும்பப் பெறும் உரிமையும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Source : National Herald, India Today