சென்னை,

த்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை காரணமாகவே நாட்டில்  வரி வருவாய் உயர்ந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறி உள்ளார்.

சென்னையில் நேற்று  நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

ரூபாய் நோட்டு ஒழிப்பு ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கை என்றும், இதை எடுக்க தாங்கள் மிகவும் யோசித்தோம் என்று கூறினார்.  வேறு வழியில்லாமல் கடினமான மனநிலையில்தான் 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழல் உருவானது என்று கூறிய ஜேட்லி,   ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து உள்ளது என்று கூறினார். மேலும், இதன் காரணமாக  நாட்டின் வரி வருவாய் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.