டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புதிய நாடாளுமன்ற வளாகம், ஒருங்கிணைந்த மத்திய தலைமை செயலகம் கட்டுவதற்கான ஓப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதற்கான திட்டச் செலவாக ரூ.940 கோடி வரை மத்திய பொதுப் பணித்துறை நிர்ணயித்துள்ளது.
டாடா, எல்&டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் நாடாளுமன்ற கட்டுமான ஒப்பந்தத்தில் பங்கேற்றன. இந் நிலையில் மிகக் குறைவாக ரூ. 861.90 கோடிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரிய டாடா நிறுவனத்துக்கு, இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.
எல்&டி நிறுவனம் ரூ. 865 கோடி கோரியிருந்தது. 21 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினம் 2022ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. 900 முதல் 1200 எம்.பி.க்கள் அமரும் வகையில் நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.