டில்லி

டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்க மும்முரம் காட்டி வருகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2007ல் இருந்து நஷ்டம் அடைந்து வருகிறது.  நிறுவனத்துக்கு ரூ. 50000 கோடி கடன் உள்ளது இதில் ரூ 28000 கோடி ஒர்க்கிங் கேபிடலுக்கான கடனும் ரூ. 4000 கோடி வட்டி பாக்கியும் உள்ளடங்கும்

இந்த நட்டத்தை சரிக்கட்ட அரசு நிதி வழங்கியும் ஒன்றும் நடக்கவில்லை.  மக்களின் வரிப்பணம் வீணானது தான் மிச்சம். .  இதனால் மத்திய அரசு இந்த நிறுவனத்தை விற்று விடும் எண்ணத்தில் உள்ளது. அமைச்சர்கள் அருண் ஜேட்லி மற்றும் அசோக் கஜபதி ராஜு ஆகியோர் இந்த தகவலை வெளிப்படையாகவே கூறி உள்ளனர்.

டாடா குழுமத் தலைவர்களில் ஒருவரான சந்திரசேகரன் இது பற்றி அரசுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.  51% சதவிகிதப் பங்குகளை வாங்கும் முயற்சியில் டாடா நிறுவனம் உள்ளது.   அரசுக்கும் இப்போது இருக்கும் கடன் சுமையில் ஏர் இந்தியா நிறுவனத்தை யார் தலையில் கட்டுவது என்றே நினைக்கிறது.

இந்த டீல் முடிந்தால் ஏர் இந்தியா தனது தாய் நிறுவனத்துக்கு மீண்டும் வந்து சேரும்.   ஆம்.  ஏர் இந்தியா தேசியமயம் ஆகும் முன்னர் அது டாடா நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தது