சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்காக ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நிதி கோரிய உடன் பிரபல நிறுவனமான டாடா குரூப்ஸ், ரூ.1500 கோடிகளை அள்ளிக்கொடுத்து தனது தாராள மனதை இந்திய மக்களுக்கு திறந்து காட்டியது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக சுமார் ரூ. 8 கோடி மதிப்புள்ள 40 ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ள நிலையில், தற்போதுவரை 38,139 போர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 15,502 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களில் 1,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்) மட்டும் 31 பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டி ருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 12 போ கரோனாவால் உயிரிழந்துள்ளனா். 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா நோய் குறித்து கண்டறிய நோயாளிகளின் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுகிறது. இதனால் நேர விரயம் ஆகிறது.
இதையடுத்து, ரேப்பிட் டெஸ்ட் கருவி மூலம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, அந்த கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த கருவிகள் இன்னும் வந்துசேரவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தின் தேவையை கருதி, ம் நோய்த்தொற்று பரிசோதனைக்காக 40 ஆயிர பிசிஆர் கருவிகளை வழங்கியுள்ளது டாடா நிறுவனம்.
இதை தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, டாடா நிறுவனத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.