தேவையான பொருள்கள்:

மாங்காய் – 1

வெல்லம் –  2

தாளிப்பதற்கு;

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – சிறிது

உளுந்து – சிறிது

மிளகாய் தூள் –  2

கறிவேப்பிலை – சிறிது

உப்பு-தேவையாவை

செய்முறை:

மாங்காய் தோல் நீக்கி சிறு துண்டுகளாகவோ அல்லது துருவியோ வைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தை கொஞ்சம்  தண்ணீர் விட்டு கொதித்ததும் வடிகட்டிக் கொள்ளவும். அப்போதுதான் தூசி, மணல் நீக்கப்படும்.

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, மிளகாய் தூள், கறிவேப்பிலை தாளித்து பிறகு  நறுக்கிய  அல்லது துருவிய மாங்காய்  போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் வெல்லதை சேர்த்து வதக்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பிலி ருந்து  இறக்கிவிடலாம். இப்போது சுவையான மாங்காய் பச்சடி ரெடி.