திருவண்ணாமலை
வரும் 12 முதல் 14 ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்க்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுவதால் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, நகரப் பகுதிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே திருவண்ணாமலை, மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுகிறது