சென்னை:
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 3,600-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 27 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சம்பளம் உயர்த்தப்பட்டது.
அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்த்தப்பட்டு, ரூ.9,500ம், விற்பனையாளர்களுக்கு சம்பளம் 1,900 உயர்த்தப்பட்டு, ரூ.7,500-ம், விற்பனை உதவியாளர்களுக்கு 2,300 அதிகரிக்கப்பட்டு 6,500-ம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், ஊதிய உயர்வு ஊழியர்களுக்கு 1,000-க்கு மேல் இருக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி சட்டப்பேவை கூட்டத் தொடர் கூடுகிறது. மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் ஊழியர்களின் பதவிக்கு ஏற்றவாறு அல்லாமல், அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் சம்பள வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கான அறிக்கையை தயாரித்து அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அரசும் சம்பள உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியாகும் என்றும் செப்டம்பர் முதல் சம்பள உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது.