மன்னார்குடி:
காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறுகிறது.
நேற்று முன்தினம், நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில், அக் கட்சியைச் சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்கு கொண்டு வரப்பட்டது. இப்போது அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று காலை பதினோரு மணி அளவில் விக்னேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அவரது வீட்டின் முகவரி:
பா. விக்னேசஷ்,
த/பெ பாண்டியன்
கோபால சமுத்திரம் மேலவீதி,
மன்னார் குடி,
திருவாரூர் 614001
Patrikai.com official YouTube Channel