சென்னை

மீண்டும் கடும் மழை வரக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் என கூறப்படும் பிரதீப் தனது முகநூலில் பதிந்துள்ளார்.

தமிழகம் எங்கும் கடந்த அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து தொடர் மழை பெய்து வந்தது.   பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.   தொடர்ந்து மழை பெய்து வந்துள்ள நிலையில் கடந்த சில நாக்டளாக நாகை, மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே தற்போது மழை பெய்து வருகிறது.   சென்னையில் எங்கோ எப்போதோ சிறு மழை பெய்தாலும், பொதுவாக வெய்யில் அடித்து வருகிறது.

தமிழ்நாடு வெதர்மேன் எனக் கூறப்படும் பிரதீப் தனது முகநூலில் மழை வருவதைப் பற்றிக் கூறுவது வழக்கம்.    அவர் கூறிய நாட்களில் மழை பெய்வதுண்டு.  தற்போது அவர் தனது முகநூலில், “மழை மேகங்கள் தெற்கு சென்னை உட்பட பலபகுதிகளில் பலத்த மழைக்காக தயாராகி வருகின்றன.  இது வரை பெய்த மழை வெறும் ஒத்திகை மட்டுமே.  இனிமேல் திங்கள் முதல் வியாழன் வரை பெய்யப்போவது தான் ஒரிஜினல் மழை.   அனேகமாக சனிக்கிழையோ, ஞாயிற்றுக்கிழமையோ கூட மழை துவங்கலாம்.  இந்த மழை டெல்டா மாவாட்டங்களை திக்கு முக்காட வைக்கப் போகிறது” என பதிந்துள்ளார்.