சென்னை:
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பாடத்திட்டமானது வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தமிழக மாணவர்கள் நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும் என அறிவித்த தமிழக அரசு, தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதியபாடத்திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
அதன்படி 2018 – 19 கல்வியாண்டில் முதல் கட்டமாக1, 6, 9,11ம்வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டது. 2வது கட்டமாக 2019 – 20ம் கல்வி ஆண்டில் 2, 7, 10,12ம்வகுப்புகளுக்கும், 3வது கட்டமாக 2020 – 21 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8ம்வகுப்புகளுக்குபாடத்திட்டங்கள்மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டை யன், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தமிழக பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது என்றும் கூறினார்.