ஆன்லைனில் விளையாடும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா அளித்த புகாரில், ““பப்ஜி” எனும் ஆன்லைன் விளையாட்டில் புதிய பதிப்பில் இஸ்லாமியர்களின் புனித தலமான “காஃபாவை” போன்ற மாதிரி வடிவத்தை உருவாக்கி இழிவுபடுத்தி உள்ளனர். இது இஸ்லாமியர்களை கொந்தளிக்க செய்து உள்ளது. எனவே “பப்ஜி” விளையாட்டை தடை செய்ய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்தபாவின் புகாரை ஏற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால், பப்ஜி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு முன்வரும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது.