டெல்லி: தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதே போன்று மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
அதற்கான ஆயத்த பணிகளில் முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்து அறிவிப்பும் வெளியிட்டும் வருகின்றன.
இந் நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் அன்றே வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிடும். பிப்ரவரியில் அறிவிக்கை வெளியானால் மார்ச் மாதம் இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 4, 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்பதால் ஏப்ரலில் தேர்தல் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது