சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4666 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,65,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,371 பேர் உயிர் இழந்து 6,12,320 பேர் குணம் அடைந்து தற்போது 43,239 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,84,429 பேர் பாதிக்கப்பட்டு 3,441 பேர் உயிர் இழந்து 1,67,284 பேர் குணம் அடைந்து தற்போது 13,704 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 39,870 பேர் பாதிக்கப்பட்டு 608 பேர் உயிர் இழந்து 37,196 பேர் குணம் அடைந்து தற்போது 2,066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 37,919 பேர் பாதிக்கப்பட்டு 502 பேர் உயிர் இழந்து 32,653 பேர் குணம் அடைந்து தற்போது 4764 பேர் சிகிச்சையில் உள்ளனர்.