கவுகாத்தி: கடந்த 2018ம் ஆண்டு, நாட்டிலேயே சாலை விபத்துக்கள் அதிகம் நடந்த மாநிலங்களுள், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 63290.

மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில்தான் உயிரிழப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. கடந்தாண்டின் சாலை விபத்துக்களில், அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் இறந்தோரின் எண்ணிக்கை 2966.

ஆனால், இந்தியளவில் அஸ்ஸாம் இறப்பி விகிதத்தில் பட்டியலில் பின்னால்தான் உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம்.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்தாண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் அஸ்ஸாம் முதலிடத்திலும், மிசோரம், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் வருகின்றன.