விஜயவாடா,

சென்னையை சேர்ந்த தொழிலதிபர்களின் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்கள் ஆந்திராவில் கைப்பற்றப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், சென்னை தொழிலதிபர்களுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, செல்லாத பழைய  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்த விசாரணையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

பண மதிப்பிழப்பு  செய்யப்பட்ட ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மாற்ற மத்திய அரசு அளித்துள்ள அனுமதி நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், சென்னை தொழிலதிபர்களின் பணத்தை ஆந்திரா விஜயவாடா கொண்டு சென்று, மாற்ற முயற்சி செய்தபோது, 7 பேரும் காவல்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த பணம் திருவத்தூரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கும், சென்னை புரசை வாக்கத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ஒருவருக்கும் ‌ சொந்தமானது என தெரிய வந்துள்ள தாக ஆந்திர போலீசார் கூறி உள்ளனர்.