தஞ்சாவூர்
தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கை ஒட்டி யாகசாலையில் பிப்ரவரி 1 முதல் 5 வரை தமிழில் திருமுறை ஓதப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவைத் தமிழ் முறைப்படி நடத்தக் கோரி தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம் துரைசாமி மற்றும் டி ரவீந்திரன் ஆகியோரின் அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. அப்போது அரசு தரப்பில் இது சமய அறநிலையத் துறை வரும் பிப்ரவரி 1 முதல் ஐந்தாம் தேதி வரை தமிழில் திருமுறை பாராயணம் ஓதப்படும் என அறிவித்ததது. இந்த தமிழ் திருமுறை பாராயணம் குடமுழுக்கு யாக சாலையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் மனுதாரர் தரப்பில் முக்கியமாகக் குடமுழுக்கு நிகழ்வு எந்த முறையில் நடைபெறும் என விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது. இதற்குப் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைச் செயலர், ஆணையர்,மத்திய தொல்லியல் துறை ஆணையர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், கோவில் நிர்வாகம் ஆகியோர் பதில் அளிக்க அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 27 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.