சென்னை:‘ துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுன் பாடப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பாடப்பட்டது. இரண்டு முறை தமிழ்த்தாய் பாடப்பட்தால் சர்ச்சை எழுந்தது.

இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.  அது டெக்னிக்கல் எரர் என தெரிவித்துள்ளார். முன்னதாக  முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதை பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள். ‘கண்டமிதில்’ என்பதற்கு பதிலாக ‘கண்டமதில்’ என பாடி விட்டனர். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும் அதை மீண்டும் பாடும்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் சொன்னார். அதனை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது. அப்போது பாடல் வரியில் ‘புகழ்’ மணக்க என்பதை ‘திகழ்’மணக்க என்று மீண்டும் பிழையுடன் பாடினார்கள். இதையறிந்த உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை ஓரக்கண்ணால் பார்த்து எச்சரித்ததுடன்,   பாடல் பாடி முடித்ததும் அதை பெரிதுப்படுத்தாமல் விட்டு விட்டார்.

நிகழ்ச்சி முடிவில் செய்தியளார்களிடம் பேசிய துணைமுதல்வர்   தமிழ்த்தாய் வாழ்த்து  ‘தவறாக பாடவில்லை. எதுவும் பிரச்னையை கிளப்பிடாதீங்க’ என்று கூறிச் சென்றார். சிறு ‘டெக்னிக்கல்’ தவறு தான் ‘மைக்’ சரியாக வேலை செய்யவில்லை அதனால், . இரண்டு மூன்று இடத்தில் அவங்க பாடும்போது குரல் கேட்கவில்லை,  அதனால் மறுபடியும் மீண்டும் முதலில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி இருக்கிறோம். அது முடிந்ததும் தேசிய கீதமும் ஒழுங்காக பாடப்பட்டது என்று கூறியதுடன்,

இந்த விஷயத்தில், தேவையில்லாமல் மீண்டும் ஏதும் பிரச்சனையை கிளப்பி விடாதீர்கள் என கூறினார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக  பங்கேற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியில்,  பாடிய தமிழ்த்‘தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டது. இது சர்ச்சையானது. இதைத்தொர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கும், கவர்னர் ஆர்என்ரவிக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில்,  பாப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பிழையாக பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தொடர்பாக சமுக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,

. நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நிருபர்கள் சந்தித்து பேசினார். Tamil Thai Vazhthu Udhayanidhi Stalin தமிழ்த்தாய் வாழ்த்து உதயநிதி ஸ்டாலின்