2015-ல் பிரேம்ஜி நாயகனாக நடித்த மாங்கா என்ற படம் வெளியானது. தற்போது அவர் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் தமிழ் ராக்கர்ஸ்.
இதில் நடித்திருப்பதுடன், இசையமைக்கவும் செய்துள்ளார். பாடல்களை பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் எழுதியுள்ளார். இந்தப் படத்தை ஐஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் பிச்சாண்டி என்பவர் தயாரித்துள்ளார். படத்தை பரணி ஜெயபால் இயக்கியுள்ளார்.
அண்மையில் தமிழ் ராக்கர்ஸின் பர்ஸ்ட் லுக்கை பிரேம்ஜி ட்விட்டரில் வெளியிட்டார். அதில் ஒரு கையில் சைக்கிள் செயின், மறுக்கையில் சாராய பாட்டில், வாயில் சிகரெட் என டெரரான லுக்கில் காட்சியளித்தார் பிரேம்ஜி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.