சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி, அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமான இன்று கேரள மக்களும் விசு பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.  சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் இது. இந்நாளில் மக்கள் குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்றும், வீடுகளில் பலகாரங்கள் செய்தும் இறைவனை வழிபடுவர்.அந்தவகையில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் தமிழகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தை ஒட்டி மக்கள் புத்தாடை அணிந்து , கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர். வீடுகளில் பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து தங்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்தில் , “தமிழகத்து சகோதர சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் , தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும், மனைவி ஜுல்லும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பெங்காலி, கம்போடியன், லியோ, மியான் என்றும் பதிவிட்டுள்ளார்.

அன்பும் அமைதியும் நிலவி, நலமும் வளமும் பெருகி, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் வாழ உலகெங்கும் உள்ள தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகெங்கிலும் வாழும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்