சென்னை: ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் த னது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி. குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம்.

2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திமுக அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%! இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, ஒன்றிய அரசு! சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக!” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசின் ஏற்றுமதி-இறக்குமதி விவரங்கள் குறித்து ஆண்டுவாரி வர்த்தக பகுப்பாய்வுக்கான தேசிய ஏற்றுமதி-இறக்குமதிகளை பதிவு செய்திடும் நிர்யாத் நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிர்யாத் நிறுவனம் 2024-25-ம் ஆண்டுக்கான ஜவுளி ஏற்றுமதிகள் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ஜவுளி துணிகளின் மதிப்பு 36,610 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி). இதில் தமிழ்நாடு மட்டும் 7997.17 மில்லியன் டாலர் (ரூ.73 ஆயிரத்து 925 கோடி) மதிப்புடைய ஜவுளித் துணிகளை ஏற்றுமதி செய்து ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.தமிழ்நாட்டினை அடுத்து, தொழில் வளர்ச்சியில் எப்போதும் முன்னணியில் நிற்கும் மாநிலங்களான குஜராத் 2-ம் இடமும், மராட்டியம் 3-ம் இடமும் பெற்றுள்ளன.

இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைவதற்குமுன் 2020-21-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்று மதியான ஜவுளி துணிகளின் மதிப்பு 6193.39 மில்லியன் டாலர் மட்டுமே (சுமார் ரூ.57 ஆயிரத்து 251 கோடி).தமிழ்நாட்டில், 2020-21 ஆண்டினைவிட 2024-25-ம் ஆண்டில் 1803.78 மில்லியன் டாலர் (சுமார் ரூ.16 ஆயிரத்து 670 கோடி) அளவுக்கு. அதாவது 4 ஆண்டுகளில் 29 சதவீதம் அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்து  தமிர்நாடு சாதனை  நிகழ்த்தியுள்ளது.

[youtube-feed feed=1]