சென்னை:  பிளஸ்2 மறுகூட்டல் முடிவுகள் வரும் 18ந்தேதி வெளியாகும் என தேர்வுத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் ஜூன் 19 முதல் நுழைவுச்சீட்டு பெறலாம் என தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

பிளஸ்2 (12-ம் வகுப்பு) மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே மாதம்  6ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தங்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நேற்று முதல் வழங்கப்பட்டது. மாணவர்கள், https://dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில், பிறந்த தேதி, பதிவெண்களை பயன்படுத்தி பதிவிறக்க வசதி செய்யப்பட்டது. மேலும், மாணவ, மாணவியளுக்கு பள்ளிகள் மூலமும்  மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்த,  பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பபிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மறுமதிப்பீட்டு கட்டணம் ஒரு பாடத்திற்கு ₹505 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படிவங்களைப் பெற்றவுடன், வாரியம் 10 முதல் 15 நாட்களுக்குள் முடிவுகளை மறு மதிப்பீடு செய்யும். இந்த மறுமதிப்பீட்டின் முடிவு மாணவர்களுக்கான இறுதி முடிவைக் குறிக்கும். அதன்படி விண்ணப்பிக்கும் தேதி மே 11ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களின் தேர்வு விடைத்தால் மீண்டும் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், பிளஸ்2 (12-ம் வகுப்பு) மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.