சென்னை:

மிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 9 மணி வரை 20,497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 24ந்தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இருந்தாலும், அரசின் உத்தரவை மீறி ஏராளமானோர் வாகனங்களில் சாலைகளில் பயணம் செய்து வருகின்றனர். தொடக்கத்தில் அவர்களை காவல்துறையினர் அமைதியான முறையில், வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்திய நிலையில், மக்கள் அதை கண்டுகொள்ளாததைத் தொடர்ந்து, சற்று கடினமான (அடி, உதை) நடவடிக்கை எடுத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, தற்போது விதிகளை மீறி வாகனங்களில் செல்பவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலரை கைது செய்து சொந்த ஜாமினில் விடுதலை செய்து வருகின்றனர்.

அதன்படி இன்று காலை 9 மணி வர நிலவரப்படி  தமிழகம் முழுவதும் 19,637 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், 22,906 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும், 15,129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராதமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.