சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, மீண்டும் நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் விலக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.