சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-வது வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 5 நாட்கள் கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தடை சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் பேரவையில் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டசபை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாட்கள் கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜெயலலிதாவின் மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.