கிருஷ்ணகிரி:
சூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
border1
காவிரி பிரச்சினை ஏற்பட்டு  23-வது நாளாகியும் இன்னும் பதற்றமாகவே உள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழக கர்நாடக எல்லையில் துணைராணுவத்தின்ர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆனால் ஒருசில நாட்களாக சகஜ நிலை திரும்பியதால், துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது.
தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு   எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
மேலும் தமிழக கர்நாடக எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதையடுத்து துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இந்நிலையில், பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.