சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கும் மோடி அரசை எதிர்க்கும் வழியை இந்தியாவுக்கு தமிழகம் எடுத்துக்காட்டியிருக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறினார்.


அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டமாகும். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது. அங்கே தான் அம்பேத்கர் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்தது, மாநாட்டில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசினார். அப்போது, ‘‘நாட்டில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அமலாக்கத்துறையும், சிபிஐயும் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் பெரியளவில் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அங்கெல்லாம் அமலாக்கத்துறை செல்லாமல், தமிழகத்துக்கு வருகிறது. இதையெல்லாம் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இந்த ஆட்சியாளர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள்.
ஆளுநருக்கு எதிராக பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கும் மோடி அரசை எதிர்க்கும் வழியை இந்திய மக்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டியிருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.