சென்னை: உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு மாறி வருகிறது சென்னையில் இன்று நடைபெற்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில், வான்வெளி மற்றும் ராணுவ துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக அரசின், ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னையில் வரும், 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை நந்தம்பாக்கத்தில் TIDCO சார்பில் நடைபெறும் விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான (AeroDefCon 25) கண்காட்சி கருத்தரங்கு நடைபெறு கிறது. 3 நாட்கள் நடைபெறும் இக்காட்சியில், வான்வெளி மற்றும் ராணுவ தளவாட துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் மாநாடு நடைபெறவுள்ளது அதாவது, ‘ஏரோடிப்கான் 25’ , ‘ஏரோஸ்பேஸ் அண்டு டிபென்ஸ் மீட்டிங்’ என்ற மாநாட்டை நடத்துகிறது. நம் நாட்டின் ராணுவ அமைச்சகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.சி.ஐ., ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. குறிப்பாக வான்வெளி துறையில் முன்னணியில் உள்ள, ‘ஏர்பஸ், போயிங், டசால்ட், சப்ரான்’ ஆகிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த நிலையில், விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றியவர், “உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு மாறி வருகிறது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக உள்ளது. அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது தமிழ்நாடு. இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்” என்று கூறியதுடன்,
தமிழக தொழில்துறை மாநாடுகள் உலக அளவில் பேசப்படுகின்றன. இந்தியாவை மட்டும் அல்ல, உலகையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது. உலக அளவில் வளரும் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. உற்பத்தி துறையில் லீடராக தமிழ்நாடு மாறி வருகிறது என்று கூறிய முதல்வர், , அனைத்து தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது என்றவர்,
இன்று நான் தொடங்கி வைத்தது வெறும் கண்காட்சி அல்ல, முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறியும் தளம். இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது. பாதுகாப்பு துறையில் முக்கிய மையமாக தமிழ்நாடு மாறும் என நம்புகிறேன்.
பாதுகாப்புத்துறையில் 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. என்று கூறியவர், சென்னை அருகே AEROHUB என்ற திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது என்ற சுட்டிக்காட்டியதுடன், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாக திகழ்கிறது என்றும், தொழில்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறும் அழைப்பு விடுத்தார்.