சென்னை: மருத்துவத்துறையில் உலகுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு என்று கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கியூபா போல தமிழகமும் முன்னணியில் இருப்பதாக கூறினார்.
சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமலிலி அருகே உள்ள நசரத்பேட்டையில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணயின், அங்கு ஆக்சிஜன் உற்பத்தி மையம், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் போன்றவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த பகுதியில் 6 கே.எல்.ஆக்சிஜன் டேங்க் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியவர், மருத்துவத் துறையில் கியூபா போல் தமி;ழநாடும் உலகிற்கு முன் உதாரணமாக திகழும் என்றார். கொரோனாவின் பல்வேறு அலைகளில் பெரிய பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு மீண்டு சகஜ நிலைக்கு வந்து உள்ளது. இதற்கு தமிழக மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம்.
தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக இறப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தட்டு மொத்த தமிழக மக்கள் ஒருங்கினைந்ததால் இந்த சாதனை செய்ய முடிந்தது இருந்தாலும் இன்னும் 2 மாதங்கள் கட்டாயம் மக்கள் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை பின் பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.