சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டதுக்கு கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ,முதலமைடச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களது போராட்டத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.1.2026) ஆணையிட்டார்.
ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையினை நிறைவேற்றியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், ஜாக்டோ-ஜியோ உள்பட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் முதலமைச்ச்ர ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டனர். அப்போது அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் (தியோடர்), தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, நர்சுகள் பொதுநல சங்கம், தமிழ்நாடு அளவிலான பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்.சி./எஸ்.டி ஆசிரியர் சங்கம், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் (தீபம்), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கல்வித்துறை தட்டச்சர்கள் சங்கம், தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அளவிலான பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் தலைமைச்செயலகம் வளாகத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க தலைவர் வெங்கடேசன் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், ”தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் அறிவித்திருப்பதன் மூலம் எங்களின் 23 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும். பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பு நிதியாண்டிலேயே செயல்பாட்டுக்கு வரும். மற்ற கோரிக்கைகளும் ஜனவரி மாதத்திற்கு உள்ளாக நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளதால் வரும் ஜனவரி 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேற்கூறிய இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.
தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.
இவ்வாறு கூறியுள்ளது.
[youtube-feed feed=1]