சென்னை: சென்னையின் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு ரூ .816 கோடி செலவிடுகிறது.
சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை தொடர்ந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும், நீர்வழித் தடங்களையும் மீட்டெடுக்க 816 .80 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்த திட்டத்தை பொதுப்பணித்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் என்று சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலத்தை பாதுகாக்க அரசு முழுமையாக உறுதியளித்துள்ளது. அதன்படி, வெள்ளநீரை உறிஞ்சவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடடிவக்கைகளிலும் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் ரூ .165.68 கோடி செலவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஓ. பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு தேவைப்படும் என்பதால், இந்த திட்டத்திற்கான காலக்கெடு குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.