வுடிகள் மற்றும் சமூக விரோதிகளை எதிர்த்து போராடும் காவலர்கள் வீர மரணம் அடையும் நேரங்களில், அவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அளித்து வருகிறது.
இப்படி நிவாரணம் வழங்குவதில் அரசு, பாரபட்சம் காட்டுவதாக போலீசார் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ரவுடியை பிடிக்க சென்ற போலீஸ்காரர் சுப்பிரமணியன், குண்டுவீசி கொல்லப்பட்டார்.

அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.

ஆனால், இதற்கு முன்பு இதேபோல் ,உயிரை பணயம் வைத்து குற்றவாளிகளுடன் போராடி உயிர் நீத்த காவலர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிவாரணம் கொடுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் போலீசார்’’ ஒரு கண்ணில் வெண்ணைய்..மறு கண்ணில் சுண்ணாம்பா?’ என குமுறுகின்றனர்.

சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் , கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்துக்கு கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது உயிர் இழந்தார்.
அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது.
( உடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி குண்டு தவறுதலாக பெரியபாண்டியன் மீது பாய்ந்து அவர் மரணம் அடைய நேரிட்டது)

களியக்காவிளையில் கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் இறந்தார். அவரது குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

ஆனால் காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு மட்டும் 50 லட்சம் ரூபாயா? என சக காவலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

-பா.பாரதி.