சென்னை:
மிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை (பிப்ரவரி 5ஆம் தேதி) வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மே7-ம் தேதி கொரோனா தடுப்பு பணிகளுக்கான செலவை கணக்கிட்டு செலவை குறைப்பதற்கான நடவடிக்கையாக, அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 59-ஆக கடந்த மே மாதம் 14-ம் தேதி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் என்பதால், கடும் எதிர்ப்பை கிளப்பியது.  இந்த நிலையில் அடுத்த கட்டமாக 59-வயதில் இருந்து 60-ஆக உயர்த்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.