சென்னை: உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்  வழங்கப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,   2 ஆயிரம் உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு தலா  ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க உள்ளது.  இதற்காக தமிழ்நாடு  ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ஏற்கனவே இதுதொடர்பாக தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,000 இணைய அடிப்படையிலான சேவை ஊழியர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ.20,000 மானியமாக தமிழக அரசு வழங்கி உள்ளது.  இந்த மானியம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,975 கோடி பட்ஜெட் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இருக்கும்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு சுவிக்கி, ஷொமட்டோ உள்ள உணவு பொருட்கள் டெலிவரி செய்து வருபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.