சென்னை: ரூ.550 கோடியில் பூண்டி ஏரியின் உயரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக ரூ.550 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான, பூண்டி ஏரியின் உயரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது, திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ளது. இந்த குடிநீர் தேக்கம் ரூ.65 லட்சம் செலவில் 1939-ல் தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி இந்த நீர்த்தேக்கம் உருவாக தீவிர முயற்சி மேற்கொண்டதால், தொடக்கத்தில், அதற்கு சத்தியமூர்த்தி நீர்தேக்கம் என அழைக்கப்பட்டது. தற்போது, அது பூண்டி ஏரி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.
இந்த ஏரியானது, இந்த நீர் தேக்கத்தின் உயரம் 35 அடி . 8 ஆயிரத்து 458 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். அதற்கு மேலும் வரும் நீர் உபரியாக திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்கும் வகையில், மேலும் 2 அடி உயரம் அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிட்டது. அதில், நீர்த்தேக்கத்தில் 3.231 டி.எம்.சி. நீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இருப்பதால் மேலும் 1½ டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க ஏதுவாக நீர்த்தேக்கத்தை மேலும் 2 அடி உயரம் அதிகரிப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.550 கோடியில் இதற்காக அரசு ரூ.550 கோடி ஒதுக்கியது. நீர்தேக்கத்தை 2 அடி உயரம் உயர்த்துவதற்காக கரையின் வெளிப்புற மற்றும் கரையின் கீழ் மண் தன்மை குறித்தும் 6 பகுதிகளில் நவீன கருவிகளைக் கொண்டு மண் பரிசோதனை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின்னர் நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.