சென்னை: ஆண்டுக்கு பத்தாயிரம் கைவினைஞர்கள் பயனடையும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசுக்கு அறிவித்துள்ளது. அது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
மத்தியஅரசு, கைவினை கலைஞர்களின் வளர்ச்சிக்காக விஸ்வகர்மா என்ற திட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு அரசு மானிய உதவியுடன் கருவிகளுடன் பணிபுரியும் கைவினைஞர்களுக்கு பயிற்சியும் வழங்கி வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தத் திட்டம் கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை 18 வர்த்தகங்களில் ஈடுபடுத்துகிறது, அதாவது. தச்சர் (சுதர்/பதாய்), படகு தயாரிப்பவர், கவசம் செய்பவர், கொல்லர் (லோஹர்), சுத்தியல் மற்றும் கருவி கிட் தயாரிப்பாளர், பூட்டு தொழிலாளி, பொற்கொல்லர் (சோனார்), குயவர் (கும்ஹார்), சிற்பி (மூர்த்தகர், கல் செதுக்குபவர்), கல் உடைப்பவர், செருப்பு (சார்ம்கர்) / ஷூஸ்மித்/காலணி கைவினைஞர், மேசன் (ராஜ்மிஸ்திரி), கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / தேங்காய் நெசவாளர், பொம்மை & பொம்மை தயாரிப்பாளர் (பாரம்பரியம்), முடிதிருத்தும் (நாய்), மாலை தயாரிப்பாளர் (மலகார்), வாஷர்மேன் (தோபி), தையல்காரர் (டார்சி) மற்றும் மீன்பிடி வலை தயாரிப்பாளர் போன்றவர்களுக்கு ஆதரவு வழங்குகிறது.
இதை திமுக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இதை குலத்தொழில் என்று கூறி வருகிறது. இதையடுத்து, அதற்கு மாற்றாக, “கலைஞர் கைவினைத் திட்டம்” என்று கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, தற்போது அரசாணை வெளியிட்டப்பட்டு உள்ளது.
சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும். 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
“கலைஞர் கைவினைத் திட்டம்” – முழு விவரம் என்ன ?
இத்திட்டத்தின்கீழ் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள். பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள். மண்பாண்டங்கள். சுடுமண் வேலைகள். கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு. பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல். பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள். பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும்.
ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.in.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்குப் பரிந்துரைக்கும்.என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.