சென்னை: பெண்களின் நலனின் அக்கறை கொண்டுள்ள முதலமைச்ச்ர ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது பெண்கள் சுய முன்னேற்றம் அடையும் வகையில், மானியத்துடன் கூடிய  பிங்க்  ஆட்டோ வழங்க முன்வந்துள்ளது.  இதற்கு விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

திமுக அரசு மாணவர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில், பெண்களே இயக்கும் ஆட்டோவை மானியத்துடன் வழங்க முன் வந்துள்ளது.

முதல்கட்டமாக,  சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (Pink Auto)  திட்டத்திற்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ‘பிங்க் ஆட்டோரிக்ஷா’க்களுக்கு மாநில அரசு ஓரளவு  வழங்கும் என தெரிவித்து உள்ளது.

அதன்படி,  முதல்கட்டமாக சென்னையில் வசிக்கும் 250 பெண்களுக்கு சிஎன்ஜி/ஹைப்ரிட் ஆட்டோரிக்ஷாக்களை வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக அரசு வழங்கும் என்றும், ஆட்டோ  வாங்க தேவையான மீதமுள்ள தொகைக்கு கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

பிங்க் ஆட்டோ திட்டத்தின் விவரங்கள்

1. இத்திட்டத்திற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

2. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

3. பெண்ணின் வயது 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

4. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்

5. ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்

6. சென்னையில் குடியிருக்கும் நபராக இருப்பது அவசியம்

இத்திட்டத்திற்கென சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழக அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்கு வங்கிகளுடன் தொடர்பு அளிக்கப்படும்.

சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு, 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை – 600 001 என்ற முகவரிக்கு 23 .11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.