சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அரைகுறை பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்ப தற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழகஅரசு வெளியிட்ட உள்ளது. அதற்கான மதிப்பீடு ரூ.5,855 கோடி என தெரிவித்துள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்த திட்டம் இருப்பதாக கூறி உயர்மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது. இந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் மதுரவாய் மேம்பாலம் திட்டம் மீண்டும் தொடங்கும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தை மேற்கொள்வதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், சென்னை துறைமுகக்கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து, தற்போது,   மதுரவாயல் துறைமுகம் பறக்கும் மேம்பாலம் சாலை திட்டம் ரூ.5,855 கோடியில் செயல்படுத்த உள்ளது. அதற்காக  ரூ.5,855 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி, மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. இதில் கீழடுக்கில் உள்ளூர் வாகனங்களும் மேலடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை எடுக்கும் நிறுவனங்கள் 2.5 ஆண்டுகளில் பணிகளை முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.