சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து உள்ளது என்று கூறினார்.
2019ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் உரை நிகழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையை விட்டு வெளியேறி மு.க.ஸ்டாலின் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது என்று ஆவேசமாக கூறினார்.
தமிழகத்தை சீரழித்து சென்றுள்ள கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி கோரியது. ஆனால், மத்திய அரசு ரூ.1500 கோடி ரூபாய் அளவிற்கு கூட கஜா நிவாரணத்திற்கு வழங்கவில்லை என்று மத்திய அரசை கடுமையாக சாடினார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவு, மேகதாது ஆய்வறிக்கைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வைக்க முடியவில்லை… போன்றவை கள் காரணமாக தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தத்தை ஏற்றி யுள்ளார்கள், விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்த்து பல நாட்களாக போராடி வருகிறார்கள்… அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
குட்கா புகாரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கியுள்ளார், அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது, ஆனால், அவர் பதவி விலகவில்லை… தொடர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்…அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார் இதனால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்கள் மூலம் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.