சென்னை:

சென்னை சேலம் இடையே அமைக்கப்படவிருந்த 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமக அதிமுக அரசுக்கு எதிராக என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே ஏற்கெனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில், புதிதாக 8 வழிச்சாலை எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டன.  இந்த திட்டத்திற்காக 5 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 7,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்; 10,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாமகவும் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்து.

இதையடுத்து பாமன உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை  நீதிமன்றம்,  8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து  தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில் தேர்தலும் அறிவிக்கப்பட்டதால், மக்களின் எதிர்ப்பை மீறி, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி கூறியிருந்தார். ஆனால், சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாமக தலைவர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி  முன்னிலையிலேயே  சேலம் சென்னை 8வழிச்சாலை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

இது விவசாயிகளிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தலின்போது, அன்புமணியை தோற்கடிப்போம் என்று விவசாயிகள் துண்டுபிரசுரங்கள் விநியோகித்து வாக்கு வேட்டையாடினர். அன்புமணியும் படுதோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், தற்போது ஏற்கனவே மக்களிடம் கூறிய உறுதிமொழிக்கு மாறாக, 8 வழிச் சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக  சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பாமக, ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இதற்கு கூட்டணி கட்சியான பாமக என்ன வினையாற்றப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.