சென்னை:
தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, தமிழகத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் காலணித் தொழிற்சாலையை நிறுவமுடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தொழில்வளத்தை பெருக்கும் நோக்கில் இரண்டு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது.
இந்த நிலையில், : தைவானின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனம் ரூ.1000 கோடி செலவில் காலணி தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்திருந்தது. அதன்படி, தற்போது ஆலை நிறுவுவதற்கான முற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்த காலணி தொழிற்சாலை இன்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுவதுமாக செயல்பாட்டுக்கும் வரும்போது, சுமார் 25 ஆயிரம் பேர் முதல் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபெங் டே குழுமம் நிறுவனம் சென்னையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செய்யாறு பகுதியில் ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், தற்போது மற்றொரு நிறுவனம் செய்யாறு அருகே விளையாட்டு காலணிகளுக்கான உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.
தற்போது சென்னையில் பிப்ரவரி 1ந்தேதி முதல் 3ந்தேதி வரை சர்வதேச தோல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலை, தைவான் நிறுவனம் செய்யாறில் ஆலையை நிறுவி வரும் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய தோல் ஏற்றுமதி கவுன்சில் (சி.எல்.இ) தலைவர் பி ஆர் அகீல் அகமது, தமிழக அரசின் அழைப்பின் அடிப்படை யில் தைவான் நிறுவனம் ஆலையை நிறுவி இருப்பதாகவும், விரைவில் உற்பத்தி பணிகள் தொடங்கும், இதில் மாநில அரசு தீவிர பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழகம் தொழிற் வளர்ச்சி ஏற்ற மாநிலமாக இருப்பதாக கூறியவர், இங்குள் பெண்கள் வேலைவாய்ப்பு 85% விகிதம் இருப்ப தாகவும், இது தேசிய சராசரி 40% என்றும் தெரிவித்தார்.
மத்தியஅரசு தற்போது அறிவித்துள்ள பட்ஜெட்டில், அரசாங்கத்தின் கவனம் தொழில்களில் அதிக ஒழுங்கமைக் கப்பட்ட பணியாளர்களைப் பெற உதவும், அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பாதணிகளுக்கான சுங்க வரி அதிகரிப்பு உள்நாட்டுத் தொழில் மற்றும் தோல் துறையில் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.