சென்னை: தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு  செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு 100 சதவிகித வரிவிலக்கு அளித்தது. முதற்கட்டமாக இநத வரி விலக்கு 2019ம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையில்,  பின்னர் அது  மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு,  2025-ஆம் ஆண்டு வரை தமிழக அரசு நீட்டித்தது.

மாநிலத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத மின்சார வாகனப் பயன்பாட்டு நிலை எட்டப்படும் வரை சாலை வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று தொழில்துறை கோரியிருந்தது. இதை ஏ ற்று,  இந்தச் சலுகை  நேற்றுடன் (டிச. 31-ஆம்)  முடிவடைந்த நிலையில், 2026, ஜன. 1 முதல் 2027, டிச. 31 வரை மீண்டும் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘தமிழகத்தில் மின் வாகன பயன்பாடு 2025-இல் 7.8 சதவீதத்தை எட்டிவிட்டது. இது மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது. ஆகையால், பேட்டரியால் இயங்கும் போக்குவரத்து அல்லது பிற வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் மின் வாகனங்களின் விலை குறையும் என்பதால் வாங்குபவா்கள் பயனடைவா்’ என்று தெரிவித்துள்ளாா்.

மின்சார வாகனங்களுக்கான 100 சதவீத மோட்டார் வாகன வரி விலக்கை 2027 டிசம்பர் 31 வரை மேலும் நீட்டிக்கும் இந்த முடிவு, மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு மின்சார வாகனங்களை மேலும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும். மேலும், தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்துக்கான தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பை இது ஒரு வலுவான சமிக்ஞையாக வெளிப்படுத்துகிறது.

[youtube-feed feed=1]